Today, OTT platforms have become one of the most preferred sources of entertainment among audiences. Leading platforms such as Amazon Prime Video, Netflix, JioHotstar, ZEE5, Sun NXT, and others release new movies, web series, TV shows, and serials every week in multiple languages. As a result, the number of OTT users continues to grow significantly year after year.
This page compiles reviews, detailed analysis (note: this analysis is subjective and may vary from viewer to viewer), ratings, and essential information about new Tamil movies released on OTT platforms. Our movie reviews are available in both Tamil and English, making it easy for a wider audience to read, understand, and decide what to watch next.
Editorial Note
Curated & reviewed by Dinesh Kumar D. I personally verify every streaming link and watch every film to provide the short reviews found below.
Second Case of Seetharam
Release Date: April 17, 2026
OTT Platform: AMAZON PRIME
Languages: Tamil, Kannada
ENG
தொடர் கொலைகள் செய்யும் ஒரு கைக்கோ சீரியல் கொலைகாரனுக்கும், அவனை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும் போலிஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் கதை. வழக்கமான ஒரு த்ரில்லர் கதையை எடுத்துக்கொண்டவர்கள் அதில் வரக்கூடிய எமோசனல் காட்சிகளுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்காததால் கடைசி இருபது நிமிடங்கள் தவிர பிற காட்சிகள் கவர வில்லை. இடைவேளைக்கு பிறகு வரும் ஒரு சில திருப்பங்கள் நன்றாக இருக்கிறது. இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் கதை மிகவும் மெதுவாக நகர்வது போலவே தோன்றுகிறது.
ஆகமொத்தத்தில், செக்கேன்ட் கேஸ் ஆஃப் சீதாராம் - வேகம் தேவை.
The story revolves around a psycho serial killer who commits a series of murders and a police officer trying to track him down. While the film follows a familiar thriller setup, it fails to give enough importance to the emotional elements, making most of the scenes unengaging except for the last twenty minutes. A few twists that appear after the interval work well. However, for a film that runs for about two hours, the narrative feels quite slow-paced.
Overall, *The Second Case of Seetharam* — it needs more pace.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
The story follows Sathish, who is preparing for his wedding with his girlfriend, when an explicit video related to him gets leaked. His friend then tries to delete it, and the events that follow form the rest of the plot. Some of the dialogues manage to evoke laughter at certain points, but for the most part, the comedy does not work effectively. Moreover, the romantic portions lack emotional depth, which reduces the tension around what would happen if the video reaches his girlfriend. With weak romance, ineffective comedy, and a lack of suspense, the film struggles to stay engaging.
Overall, Musthafa Musthafa — it lacks the very excitement the story needs.
தன் காதலியுடன், கல்யாணத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் சதிஷ் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ லீக் ஆக தன் நண்பனகன் அதை அழிக்க முயல்கிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. படத்தில் வரும் வசனங்கள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் காமெடி சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. இதுபோக எமோசனலாக இருக்க வேண்டிய சதிஸ் காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லாமையால் படத்தில் சதீஷின் வீடியோ அவரது காதலிக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்கிற விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. காதலும் இல்லாமல், காமெடியும் இல்லாமல் கதையில் விறுவிறுப்பும் இல்லாமல் செல்கிறது படம்.
ஆக மொத்தத்தில் முஸ்தாபா, முஸ்தாபா, கதையில் விறுவிறுப்புக்கு தான் பஞ்சம் பா!
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
Languages: Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi
ENG
The story follows a boy who barely passes his 10th grade and moves on to the 11th, and the events that unfold in his life thereafter. Although the hero experiences multiple love interests in the film, none of them carry strong emotional weight. Instead, it is the characters and scenes involving his parents that leave a deeper impact. The first half feels unnecessary, and except for a few scenes, much of it could have been trimmed without affecting the film. While school and college students may find the film relatable, others might find it a bit difficult to connect with.
Overall, Youth — it has a message, but feels slightly lengthy.
பத்தாம் வகுப்பை பார்டரில் பாஸ் செய்துவிட்டு பதினொன்றாம் வகுப்புக்கு செல்லும் கதாநாயகனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. என்னதான் படத்தில் கதாநாயகனுக்கு ஏகத்துக்கு காதல் வந்தாலும்கூட எதிலும் பெரிய அழுத்தம் இல்லை மாறாக, அவரது அம்மா, அப்பாவின் கதாப்பாத்திரங்களும், காட்சிகளுமே மனதில் அழுத்தமாக பதிகிறது. முதல்பாதி எதுக்கு என்றே தெரியவில்லை அதில் ஒரு சில காட்சிகளை தவிர்த்து மீதமுள்ள காட்சிகளை அகற்றினாலும் கூட இந்த படத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஸ்கூல், காலேஜ் பசங்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் பிறருக்கு படத்தோடு தொடர்புபடுத்திக்கொள்வதில் சற்று கடினமாக இருக்கலாம்.
ஆகமொத்தத்தில் யூத் - படத்தில் கருத்து இருக்கிறது ஆனால் லென்த் கொஞ்சம் நீளம் தான்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
59%
Drama
Family Sentiment, Friendship, Sacrifice, Pain, Empathy, Hope, Motivation, Betrayal, Guilt, Regret, Nostalgia, Relatable Life Moments, Revenge
23%
Romance
Love, Attraction, Dating, Jealousy, Breakup Pain
18%
Comedy
Humor, Situational comedy, Dark humor, Fun moments
The story revolves around actor Vijay Sethupathi, who reaches out to people through radio to listen to stories for his next film, and the individuals who come forward to narrate those stories. Apart from the basic premise of a popular actor seeking scripts, the film does not offer much in terms of overall engagement. The twist in Nakul’s segment comes as a surprise, and a few scenes in Jayaram’s portion carry emotional weight. However, most of the other segments feel familiar and predictable.
Overall, *Kadhal Kadhai Sollava* — worth listening to once.
தன்னுடைய அடுத்த படத்திற்காக மக்களை வானொலி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு கதை கேட்கும் நடிகரான விஜய் சேதுபதிக்கும், அந்த கதையை சொல்ல வரும் நபர்களுக்கும் இடையில் நடக்கும் கதை. ஒரு பிரபலமான நடிகர் தன் படத்திற்காக கதை கேட்கிறார் என்பதை தவிற படத்தில் பெரிதாக எதுவும் சுவாரசியமாக இல்லை. நகுல் கதையில் வரும் திருப்பம் எதிர்பாராததாக இருந்தது. ஜெயராம் கதையில் சில காட்சிகள் அழுத்தமாக இருந்தது. மற்றபடி பிற காட்சிகள் எல்லாம் முன்னரே பார்த்தவையாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் காதல் கதை சொல்லவா - ஒரு முறை கேட்கலாம்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
Languages: Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi
ENG
The story revolves around an elderly grandmother who is nearing the end of her life and her relationship with her sons. The film stands out because of its natural scenes and realistic dialogues. Since the situations and characters reflect everyday life, it becomes easy for any viewer to connect with the story. In the end, the dialogues addressing women’s independence add strong value, making it a film that every woman should watch and understand. It is well-suited for a family viewing, especially for those who enjoy drama.
Overall, Thaai Kizhavi is a well-made entertainer with several powerful messages.
இது இறக்கும் தருவாயில் இருக்கும் வயதான பாட்டிக்கும் அதன் மகன்களுக்கும் இடையில் நடக்கும் கதை. இயல்பான காட்சிகளாலும், எதார்த்தமான வசனங்களாலும் படம் உயர்ந்து நிற்கிறது. இதில் வரும் காட்சிகளும், கதாப்பாத்திரங்களும் நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் காணும் நிகழ்வுகளாக இருப்பதால் படத்தை காணும் எவர் ஒருவரும் தன்னை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். இறுதியில் பெண் சுதந்திரம் குறித்து வரும் வசனங்கள் கண்டிப்பாக ஒரு, ஒரு பெண்ணும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய படம். குடும்பத்துடன் சென்று பார்க்க ஏற்ற படம். அதிலும் டிராமா விரும்பிகளுக்கு இந்த படம் மிகவும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆகமொத்தத்தில் தாய் கிழவி - பல அழுத்தமான கருத்துக்களுடன் கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
71%
Drama
Family Sentiment, Friendship, Sacrifice, Pain, Empathy, Motivation, Frustration, Social Awareness, Nostalgia, Relatable Life Moments
29%
Comedy
Humor, Situational comedy, Dark humor, Fun moments
ஒவ்வொரு நாளும் தூங்கியெழுந்தவுடன் தன்னுடைய முந்தைய நாளின் நினைவுகள் முற்றிலும் மறந்துவிடக்கூடிய கதாநாயகிக்கும், அவரை ஒருதலையாய் காதலிக்கும் கதாநாயகனுக்கும் இடையில் நடக்கும் கதை. ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் ஒரு தலைக் காதலனின் செயல்பாடுகளை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார்கள். தன் காதல் ஒரு தலைக்காதலாக இருந்தாலும் அதற்காக காதாநாயகன் செய்யும் தியாகங்களை அறிந்து அவனது காதலை கதாநாயகி
ஏற்றுக்கொள்ளும் இடம் அத்தனை அழகாக இருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் வந்திருக்கக்கூடிய இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அதிலும் குறிப்பாக காதலர்களை இந்த படம் அதிகம் கவர வாய்ப்பிருக்கிறது.
The story revolves around a heroine who forgets all her previous day’s memories every time she wakes up, and a man who is deeply in love with her in a one-sided manner. The film beautifully portrays the actions and emotions of a man who truly loves a woman. Even though his love remains one-sided, the sacrifices he makes for her are presented in a very neat and touching way. The moment where the heroine realizes his love and accepts it is portrayed very beautifully. The film is made in a way that can appeal to all kinds of audiences. It is definitely a movie that can be enjoyed with family, and it is especially likely to attract lovers.
Overall, Kadhal, Reset, Repeat — once more.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
56%
Drama
Family Sentiment, Friendship, Sacrifice, Pain, Empathy, Patience, Betrayal, Frustration, Guilt, Relatable Life Moments
The story revolves around the conflict between the owners of a bull that wins a *Manju Virattu* (bull-taming) competition and those who lose it. While some scenes feel familiar, the dialogues that accompany them help elevate the film. A group relentlessly chases the hero due to past enmity—both for a mistake he unknowingly made and for something he didn’t even do. These continuous twists keep the film engaging. If you have the time, it can be enjoyed with family.
Overall, *Vadam* — driven by lingering enmity.
மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாட்டை வளர்த்தவர்களுக்கும், அந்த போட்டியில் தோற்றவர்களுக்கும் இடையில் நடக்கும் கதை. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்தது போல் இருந்தாலும், அந்த காட்சிகளுக்கு ஏற்ப வரும் வசனங்கள் படத்தை துக்கி நிறுத்துகிறது. தெரியாமல் செய்த தவறுக்கும், செய்யாத தப்புக்கும் கதாநாயகனை முன்பகையுடன் துரத்துகிறது சில கும்பல் என அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் படத்தை வளமாக வைத்திருக்கிறது. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
ஆகமொத்தத்தில் வடம், முன்பகை துரத்துகிறது.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
83%
Drama
Love, Family Sentiment, Friendship, Sacrifice, Pain, Betrayal, Guilt, Regret, Relatable Life Moments, Revenge
The story revolves around Sasikumar and a group of people who are searching for him in order to obtain his kidney for a transplant surgery. The film not only explains the legal aspects of organ transplantation but also raises awareness about organ trafficking. By choosing organ theft as its central theme, the movie effectively presents it in the form of a gripping thriller. In the end, the film concludes on a meaningful note, inspired by Vallalar’s philosophy of *“Jeevakarunyam”* (compassion for all living beings), where the protagonist shows kindness even towards those who intended to harm him.
Overall, *My Lord* — *show compassion even to your enemy, O kind heart.*
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சசிக்குமாரின் சிறுநீரகத்தை பெற தேடி வரும் நபர்களுக்கும், சசிக்குமாருக்கும் இடையில் நடக்கும் கதை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டதிட்டங்களை கூறுவதோடு, உறுப்பு திருட்டு குறித்த விழிப்புணர்வையும் படம் ஏற்படுத்துகிறது. உறுப்பு திருட்டு என் கதைகளத்தை தேர்வு செய்து அதில் த்ரில்லர் கதையை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்கள். இறுதியில் வள்ளலாரின் "ஜீவகாருண்யம்" என்கிற தத்துவத்தை மையப்படுத்தி தன்னை கொல்ல நினைப்பவர்களுக்கும் நன்மை செய்யும் காட்சியோடு கதையை முடித்திருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஆகமொத்தத்தில் மை லார்ட் - பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
67%
Drama
Love, Family Sentiment, Sacrifice, Pain, Empathy, Betrayal, Regret, Social Awareness, Relatable Life Moments, Revenge
The story follows a man who travels from Mumbai to Chennai after receiving a call from his girlfriend and stays in an apartment there. What follows are a series of supernatural events and the mysteries surrounding them. The film presents a routine horror-thriller setup without offering any particularly engaging or fresh moments. Most of the scenes are predictable, which works against the film. Delaying the core reveal until the last half hour tests the audience’s patience. Only one or two scenes truly stand out.
Overall, *Fourth Floor* — patience is essential.
கதாநாயகன் தன் காதலியின் அழைப்பை ஏற்று மும்பையில் இருந்து சென்னை வந்து அங்கு ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார். அதன்பிறகு அங்கு நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களும், அதை சுற்றி இருக்கும் மர்மங்களுமே இந்த படத்தின் கதை. வழக்கமான ஒரு ஹாரர் த்ரில்லர் கதையை எந்தவித சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் படமாக்கியுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் முன்பே கணிக்கமுடிவது படத்திற்கு பின்னடைவாக இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் வரை கதை என்ன என்பதை சொல்லாமல் கொண்டு செல்வது பொறுமையை சோதிக்கிறது. ஒன்று, இரண்டு காட்சிகள் மட்டுமே தேறும்.
ஆகமொத்தத்தில் ஃபோர்த் ப்ளோர் - பொறுமை அவசியம்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
The story follows Seetha, who begins a journey to Madurai to attend a workshop, and the people she meets along the way, along with the events that unfold. The reasons she gives for not wanting love or marriage, and the solutions presented in the film, may not be entirely new, but they are conveyed with emotional depth. The dialogues that appear at various points in the film carry a certain weight and meaning. However, the repeated pattern of the people she encounters getting caught in problems becomes somewhat tiring. The inclusion of action scenes feels unnecessary, as the film would have worked just as well without them.
Overall, *Seetha Payanam* is a journey in search of new relationships.
மதுரையில் நடக்கும் ஒரு வொர்க் சாப்பில் பங்கேற்க பயணத்தை தொடங்கும் சீதா வழியில் சந்திக்கும் நபர்களும், நிகழ்வுகளுமே படத்தின் கதை. தனக்கு காதல், கல்யாணம் எதுவும் வேண்டாம் என சீதா கூறும் காரணங்கள், அதற்கு படத்தில சொல்லப்படும் தீர்வுகளும் புதுமையானதாக இல்லையென்றாலும், அழுத்தமானதாக இருக்கிறது. ஆங்காங்கே காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் ஆழமானதாக இருக்கிறது. தொடர்ச்சியாக இவர் சந்திக்கும் நபர்கள் பிரச்சனைகளில் சிக்குவது அயர்ச்சியை தருகிறது. படத்தில் எதற்கு சண்டைக்காட்சி என்றே தெரியவில்லை. அது இல்லையென்றாலும் இந்த படத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.
ஆகமொத்தத்தில் சீதா பயணம், பல புதிய சொந்தங்களை தேடி.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
The story revolves around an honest female police officer and a powerful local rowdy in the area where she works. The film follows a familiar narrative of the challenges faced by a sincere woman police officer. It is made in the style of films like *Singam* and *Siruthai*, but with a female protagonist at the center. Apart from this, there is nothing particularly new in the film. Sai Dhanshika is constantly involved in action sequences from beginning to end, which becomes somewhat tiring.
Overall, *Yogida* — a strong female cop is its strength, while the lack of freshness in the screenplay is its weakness.
இது நேர்மையான போலிஸ் பெண் அதிகாரிக்கும், அவர் வேலை பார்க்கும் ஏரியாவில் இருக்கும் ஒரு பெரிய ரவுடிக்கும் இடையில் நடக்கும் கதை. ஒரு பெண் போலிஸ் அதிகாரி நேர்மையாக இருப்பதால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என வழக்கமான கதையைக்கொண்டே படத்தை உருவாக்கியுள்ளனர். சிங்கம், சிறுத்தை போன்ற படங்களின் பாணியில் ஒரு கதாநாயகியை மையமாக கொண்டு படத்தை தயாரித்துள்ளனர். இது ஒன்றை தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும்படி புதியதாக ஒன்றும் இல்லை. சாய் தன்ஷிகா படம் ஆரம்பத்தில்லிருந்து சண்டைமிட்டுக்கொண்டே இருப்பது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
The story follows lovers who break up, deciding that they no longer want to continue their relationship. The film then focuses on the people they meet afterward and the problems that arise because of it. Some comedic moments work well, especially the dog’s voice-over narration and Kathir’s humorous counters. The movie also includes scenes that people who are in love—or those who are thinking about falling in love—can relate to. However, instead of choosing a clear direction—either moving on to a new love or rekindling the old one—the story keeps wandering around before finally reaching a conclusion, which creates a sense of fatigue. Vijay Antony’s occasional short songs also feel like speed breakers.
Overall, *Pookie* goes around in circles before reaching the point.
காதல் வேண்டாம் என காதலை முறித்துக்கொண்டு வெளியேறும் காதலர்கள். அதற்குபிறகு அவர்கள் சந்திக்கும் நபர்கள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை. படத்தில் வாய்ஸ் ஓவரில் வரும் நாய்க் குரல், கதிர் அடிக்கும் காமெடி கவுன்டர்கள் என சில காமெடிக் காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள் என அனைவரையும் தொடர்புபடுத்தக்கொள்ளும் காட்சிகள் படத்தில் உண்டு. ஆனால் ஒரு காதலில் இருந்து பிரிந்தவர்கள் வேறொரு காதலை தேடி செல்ல வேண்டும் அல்லது பிரிந்த காதலை புதுப்பிக்க வேண்டும் இது இரண்டையும் விட்டு, விட்டு படம் எங்கெங்கொ சுற்றி இறுதியில் முடிவுக்கு வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. விஜய் ஆண்டனியின் அவ்வப்போது வரும் சின்ன சின்ன பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்கள்.
ஆகமொத்தத்தில் பூக்கி, தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
33%
Drama
Family Sentiment, Friendship, Pain, Frustration, Regret, Relatable Life Moments
Languages: Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi, English
ENG
The story revolves around a woman named Shenba, her ambitions, and the struggles she goes through to achieve them. Despite its nearly two-hour runtime, the film never feels boring. Although a few scenes that follow can be somewhat predictable, the strong emotional backing behind them helps the audience connect well with the story. The film concludes with the idea that *“what we think is the end is actually where a new beginning starts,”* which leaves a sense of satisfaction.
Overall, *Made in Korea* is a feel-good drama that leaves a pleasant impact.
செண்பா என்னும் பெண்ணின் ஆசைகளும் அதை அடைய அவள் எடுத்துக்கொள்ளும் சிரமங்களும் தான் படத்தின் கதை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடும் இந்தப்படத்தில் பெரிதாக எங்கும் போரடிக்கவில்லை. அடுத்தடுத்து வரும் ஒரு சில காட்சிகள் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும் அந்தக்காட்சிக்கான பின்னணி அழுத்தமாக இருப்பதால் நம்மால் படத்துடன் நன்கு ஒன்ற முடிகிறது. "எது முடிவு என்று நினைக்கிறோமோ, அங்கு தான் தொடக்கம் அமைகிறது" என்கிற கருத்தை மையமாக வைத்து படம் முடிவது மன நிறைவை தருகிறது.
ஆகமொத்தத்தில் மேட் இன் கொரியா - ஒரு சிறந்த ஃபீல் குட் டிராமா!.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
100%
Drama
Love, Family Sentiment, Friendship, Sacrifice, Pain, Hope, Motivation, Frustration, Relatable Life Moments
The story follows a woman who unexpectedly becomes pregnant during the lockdown after an incident involving an unknown man. The film focuses on the difficulties she faces while trying to terminate the pregnancy and hide the situation from her family. It is unclear why the film ends with a message suggesting that she could have simply told her parents the truth, despite all the mistakes she makes in trying to conceal the issue. The movie includes several scenes that relate to situations experienced during the COVID-19 lockdown period. As the heroine continuously goes through one hardship after another, the repeated suffering creates sympathy for her but eventually becomes somewhat exhausting for the audience.
Overall, *Lockdown* is a series of trials piled one after another.
லாக்டவுன் நேரத்தில் எதிர்பாராதவிதமாக யாரென்று தெரியாத ஒரு நபரால் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண் அதை கலைக்க படும் சிரமங்கள் தான் இந்த படத்தின் கதை. அவள் அறியாதபோது நடந்த தவறுக்காக அதை வீட்டிலிருந்து மறைக்க தப்பு மேல தப்பாக செய்துவிட்டு இறுதியாக பெற்றவர்களிடம் சொல்லியிருக்கலாம் என்கிற தொனியில் என்ட் கார்டு போடுவது தான் ஏன் என்று தெரியவில்லை. படத்தில் கொரோனா காலத்து நிகழ்வுகளை தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலான காட்சிகள் உண்டு. தொடர்ச்சியாக கதாநாயகி துன்பங்கள் அனுபவிக்கும்போது அவள் மீது அனுதாபம் வருகிறது அனால் அது தொடர்ந்து கொண்டே இருப்பது சிறிது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆகமொத்தத்தில், லாக்டவுன் - சோதனை மேல் சோதனை.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
69%
Drama
Family Sentiment, Friendship, Pain, Empathy, Betrayal, Frustration, Guilt, Regret, Social Awareness, Relatable Life Moments, Exploitation
Languages: Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi
ENG
The story is set in Madurai and revolves around goat fighting, which leads to a rivalry between the hero and the villain. The goat-fighting aspect is the only fresh element, while the rest of the film follows the usual hero-versus-villain conflict. A few emotional scenes work well, and the goat-fighting sequences along with the action scenes are presented effectively. However, the villain narrating a story before every fight and repeatedly using shortcuts becomes slightly tiring after a point.
Overall, *Jockey* — the goat fights are the only new element.
இது மதுரையில் நடக்கும் கிடா சண்டை, அதனால் கதாநாயகனுக்கும் , வில்லனுக்கும் இடையில் உருவாகும் பகையை மையமாக வைத்து நடக்கும் கதை. கிடா சண்டை மட்டுமே புதுசு, மற்றபடி வழக்கமான கதாநாயகனுக்கும், வில்லனுக்குமான மோதலென நகர்கிறது கதை. சில எமோசனல் காட்சிகள் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. கிடா சண்டை காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் சிறப்பாகவே இருக்கிறது. வில்லன் ஒரு, ஒரு சண்டையின் போதும் ஒரு கதை சொல்வது, குறுக்கு வழியை கையாள்வது ஒரு கட்டத்திற்கு மேல் சிறிது சலிப்படைய செய்கிறது.
ஆகமொத்தத்தில் ஜாக்கி, கிடா சண்டை மட்டுமே புதுசு.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
41%
Drama
Family Sentiment, Friendship, Pain, Empathy, Betrayal, Frustration, Guilt, Regret, Revenge
Languages: Tamil, Telugu, Malayalam, Hindi, Marathi
ENG
The story revolves around the conflict between a simple common man and a powerful industrialist in society. The film runs entirely without dialogues, yet it conveys its message in a very neat and effective manner. It is built around Mahatma Gandhi’s philosophy: *“The change you wish to see in society should begin with yourself.”* Even without dialogues, the film does not feel particularly boring. If you are someone who does not mind watching a film without dialogues as long as it tells a good story, this movie can serve as an enjoyable watch.
சமுகத்தில் ஒரு எளிய மனிதனுக்கும், ஒரு பெரிய தொழிலதிபருக்கும் இடையில் நடக்கும் கதை. முழுவதும் வசனங்கள் இல்லாமல் ஓடும் இப்படம் சொல்ல வந்த கருத்தை மிக நேர்த்தியாக கூறியிருக்கின்றனர். 'நீ மாற்ற நினைக்கும் சமுக மாற்றம் என்பது உன்னில் இருந்து தொடங்கட்டும்' என்கிற காந்தியின் தத்துவத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வசனங்கள் இல்லையென்றாலும் படம் பெரிதாக போரடிக்கவில்லை. வசனங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை எந்த படமாக இருந்தாலும் நல்ல படமாக இருந்தால் பார்ப்பேன் என்றால் இந்த படம் உங்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமையும்.
ஆகமொத்தத்தில் காந்தி டாக்ஸ் - திருடாதே பாப்பா திருடாதே!
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
100%
Drama
Love, Family Sentiment, Pain, Betrayal, Frustration, Guilt, Social Awareness
The story revolves around a mysterious elderly witch who arrives at an old house, and the terrifying events that take place between her and the people living there. This is a familiar premise often seen in cinema. Using this concept, the film delivers a conventional horror-thriller narrative. Despite its two-hour runtime, the movie never becomes particularly boring. Both the thriller and horror elements work reasonably well throughout the film. It can be watched with family.
Overall, *Granny* — is she still alive?
ஒரு பழைய காலத்து வீடு அந்த வீட்டிற்கு வரும் ஒரு வயதான சூனியக்கார பெண்மணி அவருக்கும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் இடையில் நடக்கும் திகிலான நிகழ்வுகளே படத்தின் கதை. இது சினிமாவில் வரக்கூடிய வழக்கமான ஒரு கதைக்களம் தான். இந்த கதையைக் கொண்டு ஒரு வழக்கமான ஹாரர், த்ரில்லர் கதையை கொடுத்திருக்கின்றனர். இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் பெரிதாக எங்கும் போரடிக்கவில்லை. அந்த அளவுக்கு த்ரில்லரும் சரி, ஹாரரும் சரி நன்றாகவே வொர்க் ஆகி இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கலாம்.
ஆகமொத்தத்தில், க்ரானி - இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள்?
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
Priya Bhavani Shankar, who plays an assistant director, approaches a producer to narrate a story. The three stories she presents, along with the events that follow, form the core of the film. Presented as an anthology, the movie mainly focuses on the present-day Gen Z generation. It touches upon various themes such as love, fandom culture, and freedom in clothing, while discussing and debating what can be considered right and what may be seen as wrong.
Overall, Hotspot 2 satirizes Gen Z culture.
உதவி இயக்குனராக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகிறார். அவர் சொல்லும் மூன்று கதைகளும் அதற்கு பின்னர் நடக்கும் சம்பவங்களுமே படத்தின் கதை. ஆன்தாலஜி வகையறாவில் வந்திருக்கக்கூடிய இந்த படத்தில் முழுக்க முழுக்க ஜென்சி எனப்படும் இந்த தலைமுறை இளைஞர்களை மையப்படுத்தி படத்தை எடுத்திருக்கின்றனர். குறிப்பாக காதல், ரசிகமனப்பான்மை, ஆடை சுதந்திரம் என பல இடங்களை தொட்டு நல்லவை எவை? கெட்டவை எவை என விவாதிக்கிறது படம்.
Languages: Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Bengali, Marathi
ENG
The story follows a maternal uncle who goes searching for a missing puppy for the sake of his sister’s child. The film alternates between emotional moments shared by the uncle and the child, along with a few comedy scenes. Some of these emotional and comedic moments work well. Apart from that, there is nothing particularly new to highlight. The predictability of the story becomes a drawback for the film. Since the movie is centered around children, it is likely to entertain younger audiences. It can be a decent watch with family during leisure time.
Overall, *Lucky the Superstar* is mainly for children.
தன்னுடைய அக்காவின் குழந்தைக்காக காணாமல் போன நாய்க்குட்டியை தேடி அலையும் தாய் மாமனின் கதை. தாய் மாமனுக்கும் குழந்தைக்குமான எமோசன் காட்சிகள், கொஞ்சம் காமெடிக்காட்சிகள் என மாறி, மாறி வருகிறது. சில காமெடிக்காட்சிகளும், எமோசன் காட்சிகளும் நன்றாகவே ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. மற்றபடி புதிதாக சொல்லிக்கொல்வதற்கு ஒன்றுமில்லை. கதை முன்னரே யூகித்து அறியமுடிவது படத்திற்கு பின்னடைவாக இருக்கிறது. குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம், எனவே இது குழந்தைகளை மகிழ்விக்க வாய்ப்பிருக்கிறது. ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏற்ற படம்.
ஆகமொத்தத்தில், லக்கி த சூப்பர் ஸ்டார் - குழந்தைகளுக்கு மட்டும்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
55%
Drama
Family Sentiment, Friendship, Sacrifice, Empathy, Frustration, Social Awareness
45%
Comedy
Humor, Situational comedy, Dark humor, Irony, Fun moments
The story revolves around three friends who come together to organize a wrestling competition and the events that unfold among them. The film moves in a serious tone with themes such as a father longing for his daughter’s affection, betrayal, and revenge. At intervals, a few light comedy moments appear here and there. The wrestling fight sequences have been captured well, so fans of wrestling may find the film appealing.
Overall, *Saththa Pachcha* is centered around wrestling.
முன்று நண்பர்கள் இணைந்து மல்யுத்த போட்டி நடத்த அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. மகளின் பாசத்திற்காக ஏங்கும் அப்பா, துரோகம், பழிவாங்கல் என சீரியஸ் மோடில் போகும் படத்தில் அவ்வப்போது சின்ன, சின்ன காமெடிக்காட்சிகள் வந்து செல்கின்றன. மல்யுத்தம் செய்யக்கூடிய சண்டைக்காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது எனவே மல்யுத்த ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆகமொத்தத்தில் சத்தா பச்சா - மல்யுத்தம்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
69%
Drama
Love, Family Sentiment, Friendship, Sacrifice, Pain, Patience, Betrayal, Frustration, Guilt, Relatable Life Moments, Revenge
The story takes place in a village where two families living in the same area experience two completely different events at the same time — a wedding in one house and a death in the other. Due to past enmity, both families insist on conducting their respective ceremonies at the same time. Jeeva, who serves as the village head, tries to mediate and bring peace between them. The interesting incidents that follow form the rest of the story. The events that unfold in both the mourning house and the wedding house are presented in an entertaining manner. Since the situations shown in the film are similar to everyday incidents we often witness, it becomes easy for the audience to relate to the story. It is an enjoyable and lighthearted film that can be watched with the whole family.
Overall, Thalaivar Thambi Thalaimaiyil delivers fun and laughter under a lively leadership.
ஒரு ஊரில் ஒரே இடத்தில் வசிக்கும் இரு வீடுகளில் ஒரு வீட்டில் கல்யாண நிகழ்ச்சிகள் நடக்க மற்றொரு வீட்டில் இறப்பு நிகழ்கிறது. முன்பகை காரணமாக இருவரும் சடங்குகளை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என நிர்பந்திக்க ஊர்த்தலைவராக இருக்கும் ஜீவா அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். இதற்குபிறகு நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே இந்த படத்தின் கதை. இறப்பு வீட்டிலும் சரி, கல்யாண வீட்டிலும் சரி நடக்கும் சம்பவங்களை சுவை பட சொல்லியிருப்பது ரசிக்கவைக்கிறது. அன்றாடம் நாம் பார்த்த நிகழ்வுகளே படமாக எடுத்திருப்பதால் நம்மால் எளிதாக படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளமுடிகிறது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க நல்லதொரு பொழுதுபோக்கு திரைப்படம்.
ஆகமொத்தத்தில், தலைவர் தம்பி தலைமையில் - கலகலப்பு.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
50%
Drama
Love, Friendship, Pain, Guilt, Relatable Life Moments, Revenge
50%
Comedy
Humor, Situational comedy, Dark humor, Satire, Irony, Fun moments
The story follows a young man who fights to save his lover’s innocent brother, who is arrested by the police to protect people in power. In this difficult situation, the film tries to show how deeply the young man loves his girlfriend and how far he is willing to go to protect her. However, the lack of strong scenes to establish the depth of this love makes it difficult for the audience to emotionally connect with the story from the beginning. On the other hand, the performances of experienced actors such as Kishore, Dileepan, and Harish Peradi, along with a few well-executed scenes, help elevate the film. The non-linear presentation of the scenes also creates a bit of confusion. The film highlights how the justice that powerful and influential people easily obtain through the law often turns into injustice for ordinary people.
Overall, *IPL* portrays how the law can fall into the hands of the corrupt.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக போலீசாரால் கைது செய்யப்படும் அப்பாவியான தன் காதலியின் அண்ணனை காப்பாற்ற போராடும் இளைஞனின் கதை. இக்கட்டான இந்தசூழலில் இருந்து தன் காதலியின் காப்பாற்ற போரடும் இளைஞனின் காதல் எவ்வளவு ஆழமானது என காட்ட போதுமான காட்சிகள் இல்லாதது ஆரம்பத்தில் இருந்தே நம்மை தொடர்பு படுத்த மறுக்கிறது. மற்றபடி கிஷோர், திலீபன், ஹரீஸ் பாரடி உட்பட கதையில் வரும் அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பும், சில காட்சிகளும் படத்தை உயர்த்தி பிடிக்கிறது. காட்சிகள் ஒரே நேர்க்கோட்டில் அமையாமல் இருப்பது கொஞ்சம் குழப்புகிறது. அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களுக்கு சட்டத்தால் ஞாயமற்ற முறையில் கிடைக்கும் நீதி என்பது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
ஆகமொத்தத்தில் ஐ. பி. எல் - சட்டம் கயவர்கள் கையில்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
The story revolves around a language warrior and a police officer during the period of protests against the imposition of the Hindi language. The film attempts to address the issues caused by Hindi dominance and the need to resist it. The scenes and dialogues that oppose Hindi imposition appear at various points in the film and are presented effectively. However, although the film begins as a story about resisting Hindi imposition, it gradually turns into a revenge-driven conflict between the hero and the villain. Because of this shift, the core message of the film becomes somewhat confusing.
Overall, *Parasakthi* ends up focusing more on the clash between the hero and the villain.
இது ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு காலத்தில் நடக்கும் ஒரு மொழிப்போர் வீரருக்கும், போலிசுக்குமான கதை. ஹிந்தி மொழி ஆதிக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அதை எதிர்க்க வேண்டிய தேவைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ஹிந்தி திணிப்பிற்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம் என ஆரம்பித்து அது போகபோக ஹீரோ, வில்லன் பழிவாங்கள் கதையாக மாறிவிடுவது போன்ற தோற்றத்தை தருகிறது.
இந்த காரணத்தினாலேயே இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
The story follows a young man from an ordinary middle-class family whose dreams during sleep seem to connect with the events that unfold in his real life. The film begins with a dream, then travels through a spiritual path and eventually concludes as a fantasy story. In the end, the film conveys the message that since birth ultimately leads to death, we should live each day with responsibility. Some scenes, such as those between the mother and son, the romantic moments, and the appearances of Shivrajkumar, stand out well. However, the rest of the scenes do not create much impact.
Overall, *45* reminds us that death is certain, and therefore living responsibly is important.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞனுக்கு தூக்கத்தில் வரும் கனவும் அதை தொடர்ந்து அவனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் தான் கதை. கனவில் தொடங்கிய படம், ஆன்மீக வழியில் பயணித்து, ஃபேன்டசி கதையாக முடிகிறது. கதையின் முடிவாக பிறப்பது, இறப்பதற்கே எனவே வாழும் ஒவ்வொரு நாளும் நாம் பொறுப்புடன் வாழ வேண்டும் என்கிற கருத்தை சொல்கிறது படம். அம்மாவுக்கும், மகனுக்குமான காட்சிகள், காதல் காட்சிகள், சிவராஜ்குமார் வரும் காட்சிகள் என சில காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. ஏனைய காட்சிகள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆகமொத்தத்தில் 45, இறப்பு நிச்சயம் எனவே பொறுப்பு முக்கியம்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
This is the story of a hero who transforms into **M.G.R.** to protect young people who are protesting against the closure of a factory. Although this premise itself was enough to make a good fantasy film, the makers have failed to deliver it effectively. Only the grandfather–grandson scenes at the beginning of the film manage to capture attention. The other scenes feel repetitive, similar to what we have already seen in many films, and lack excitement, which becomes a drawback for the movie.
Overall, *Vaa Vaathiyaar* turns out to be an average film without much excitement.
இது ஒரு ஆலையை மூடும் விவகாரத்தில் அதை எதிர்த்து போராடும் இளைஞர்களை காக்க எம். ஜி. ஆராக மாறி வரும் கதாநாயகனின் கதை. இதுவே ஒரு நல்ல ஃபேன்டசி படம் கொடுக்க போதுமான கதைகாகளம் தான் இருந்தபோதிலும் அதை கொடுக்க தவறியிருக்கின்றனர். படத்தின் ஆரம்பத்தில் வரும் தாத்தா, பேரன் காட்சிகள் மட்டுமே கவனம் பெறுகிறது. பிற காட்சிகள் முன்னவே பல படங்களில் பார்த்த காட்சிகளாகவும், சுவாரசியம் குறைவாகவும் இருப்பது படத்திற்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.
ஆகமொத்தத்தில் வா வாத்தியார், இது பெரிய சுவாரசியம் இல்லாத ஒரு சுமாரான படம்.
What this film has?
These percentages are calculated based on dominant emotional beats in the film, not screen time and it may varies from viewer to viewer.
56%
Drama
Love, Family Sentiment, Nostalgia, Relatable Life Moments, Revenge
OTT Releases This Week (April 24 - April 30, 2026)
Stay updated with the latest Tamil OTT releases arriving on digital platforms this week.
Our curated list features new movie premieres and digital debuts on Netflix, Amazon Prime Video, Sun NXT, and more,
complete with language details and confirmed release dates.